ஞாயிறு, 13 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (10:44 IST)

மெய்யழகன், தேவரா வந்தும் சிக்ஸர் அடிக்கும் லப்பர் பந்து…!

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

கிராமப்புறங்களில் விளையாடப்படும் ரப்பர் பந்து கிரிக்கெட்டை மையப்படுத்தி காதல், ஈகோ, நட்பு மற்றும் சாதிய மனநிலை ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து ஒரு அழகானப் படமாக உருவாகியுள்ளது லப்பர் பந்து. இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களைக் கடந்துள்ள நிலையில் இன்னமும் பெருவாரியான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இடையில் கடந்த வாரம் கார்த்தியின் மெய்யழகன் மற்றும் ஜூனியர் என் டி ஆரின் தேவரா ஆகிய படங்கள் வெளியானாலும் லப்பர் பந்துக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் இன்னமும் கணிசமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வேட்டையன் வரும் வரை இந்த படம் இதே போல ஓடும்பட்சத்தில் பெரிய கலெக்‌ஷனை எடுக்கும் என சொல்லப்படுகிறது.