ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (15:14 IST)

லப்பர் பந்து படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த இரண்டு நடிகர்கள்… ஒவ்வொரு வசனத்துக்கும் பறக்கும் விசில்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் ‘லப்பர் பந்து’ இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி சீரிஸில் நடித்து புகழடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்க மற்ற துணை கதாபாத்திரங்களில் பால சரவணன், ஜென்சன் திவாகர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்திருந்தனர்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து மனித உணர்வுகளைப் பேசிய இந்த படம் வெளியானது முதலே பாராட்டுகளைப் பெற்றது. ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் பல காட்சிகளை விசிலடித்துக் கொண்டாடி மகிழ்ந்து பாராட்டி ரசித்து மகிழ்கின்றனர். இதையடுத்து கடந்த வாரம் ரிலிஸான ஆறு படங்களில் லப்பர் பந்து  மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்கள் மட்டும் இல்லாமல் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தவர்களும் சிறப்பாக நடித்திருந்ததாகப் பாராட்டப்படுகிறார்கள். அந்த வகையில் படத்தில் நடித்துள்ள ஜென்சன் மற்றும் பால சரவணன் ஆகிய இருவரும் ஷோ ஸ்டீலர்களாக அமைந்துள்ளனர். ஹரிஷ் கல்யாணின் நன்பராக வரும் பாலசரவணன், கிரிக்கெட் மைதானத்தில் பேசும் வசனங்கள் சிரிக்க வைப்பவையாகவும், காளி வெங்கட்டிடம் பேசும் வசனம் நெஞ்சைத் தொடுவதாகவும் உள்ளது. அதே போல குடிகாரனாக வரும் ஜென்சன் அட்டகத்தி தினேஷுக்காக அனைவரையும் சீண்டும் விதமாக பேசும் வசனங்கள் எலலம் தியேட்டரில் விசில் பறக்கின்றன.