வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (17:50 IST)

லப்பர் பந்து படத்தை தவறவிட்டாரா எஸ் ஜே சூர்யா?... No சொல்ல காரணம் என்ன?

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. படத்தில் நடிகர் தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராகக் காட்டப்பட்டார். படத்தில் அனைத்துக் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் எல்லோரையும் விட அதிகமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது அட்டகத்தி தினேஷ் நடித்த கெத்து கதாபாத்திரம்தான்.

இதுவரை அட்டகத்தி தினேஷ் என்பதுதான் அவரின் அடையாளமாக இருந்தது. ஆனால் இப்போது அவரை எல்லோரும் கெத்து தினேஷ் என்று அழைக்க ஆரம்பித்துள்ளனர்.  இந்நிலையில் இந்த படத்தில் முதலில் அந்த கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவைதான் நடிக்க வைக்கவேண்டும் என இயக்குனர் தமிழரசன் ஆசைப்பட்டாராம். அவருக்குக் கதையும் சொல்லியிருந்தாராம். ஆனால் எஸ் ஜே சூர்யா கேட்ட சம்பளம் படக்குழுவுக்கு ஒத்து வராததால் அவரை படத்துக்குள் கொண்டுவர முடியாமல் போய்விட்டதாம். மேலும் எஸ் ஜே சூர்யாவுக்கு கிரிக்கெட்டில் ஆனா ஆவன்னா கூட தெரியாதாம். அதுவும் அவர் இந்த படத்தை தவிர்க்க ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.