செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (17:58 IST)

கிரிக்கெட்டை விட காதல் பெரிசா போச்சு? ஹரிஷ் கல்யாண் நடித்த ‘லப்பர் பந்து’ டிரைலர்..!

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடித்த ‘லப்பர் பந்து என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வஸ்திகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பாலசரவணன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான லப்பர் பந்து’ என்ற படத்தை தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியுள்ளார். சீன் ரோல்டான்  இசையில் உருவாகிய இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதில் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் எதிரெதிர் கிரிக்கெட் அணியில் இருக்கும் நிலையில் திடீரென இவர்களுக்குள் ஏற்படும் காதல் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. அதன் பின் நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது .

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் என இரண்டு இளைய தலைமுறை ஹீரோக்கள் இந்த படத்தில் நடித்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran