1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 3 டிசம்பர் 2022 (15:01 IST)

அடிச்சான் பாரு சிக்ஸ்... பிரதீப் சம்பளத்தை கேட்டு பதறி ஓடிய தயாரிப்பாளர்!

லவ் டூடே படத்தின் இயக்குனர் பிரதீப்பிற்கு குவியும் ஹீரோ வாய்ப்புகள்!
 
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே பல கோடிகளை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. 
 
ஒப்போது கிட்டத்தட்ட தன்னுடைய திரையரங்க காலத்தை நிறைவு செய்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகளவில் சுமார் 100 கோடியை நெருங்கியுள்ளதாம்.  இதனால் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாகபஸ்டர் படமாக லவ் டுடே அமைந்துள்ளது.
 
இதனால் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிக பல நடிகர்கள் முயற்சித்து வருகிறார்களாம். ஆனால், அவர் நடிகர் விஜய்க்கு ஒரு கதை சொல்லி ஓகே பண்ணிவிட்டாராம். ஆனால் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருவதால் இன்னும் ஒரு ஆண்டுகள் ஆகும். 
 
அதற்கு இடையில் பிரதீப் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால், அவரை தேடி வரும் தயாரிப்பளர்களின் பல கோடி கேட்டு பதற  வைக்கிறாராம். அப்படியும் ஒருத்தர் ஓகே பண்ணிவிட்டார்.