1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (08:29 IST)

சயின்ஸ் பிக்‌ஷன் கதையில் நடிக்கிறாரா விஜய்? – லவ் டுடே இயக்குனர் சொன்ன கதை!

விஜய்யிடம் கதை சொல்லியுள்ளதாக பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கும் மேலாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பிரதீப் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த படம் நடக்கலாம் என்றும் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது அந்த படம் உருவானால் அதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு காத்திருக்கிறது. மேலும் பிரதீப்புக்கும் ஏற்கனவே இன்னொரு படத்துக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.