1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (21:09 IST)

ரசிகரை தூக்கிச் சென்ற விஜய்...வைரலாகும் புகைப்படம்

vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள்  நடித்து வருகின்றனர்.

வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாவதை ஒட்டி சென்னி மெட்ரோ ரெயில்களில் இப்படத்தை லலித்தின் செவன் ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் புரமோசன் செய்து வருகின்றன.

இந்த நிலையில், அஜித்தின் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு மோதவுள்ளதால், கடும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,இன்று  விஜய் மக்கள் இயக்க 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை காலை 9 மணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பனையூரியில் உள்ள விஜய் அலுவலகத்தில் அவர்களை  விஜய் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, ஒரு மாற்றுத்திறனாளி ரசிகரை விஜய் தூக்கிச் செல்லும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், ஆகிய மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில், அடையாள அட்டை வைத்திருந்த நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர்.  நிர்வாகிகளுக்கு தடபுடலல் விருந்து வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகிறது.