1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:49 IST)

விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்: முக்கிய ஆலோசனை!

Vijay
நடிகர் விஜய் இன்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த மாதம் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து விஜய் இன்று செங்கல்பட்டு கடலூர் அரியலூர் திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து உள்ளதாகவும் இந்த சந்திப்பு சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
ஒவ்வொரு மாதமும் இது போன்ற சந்திப்பு நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த மாதம் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்து உள்ளார் 
 
மேலும் இந்த சந்திப்பின்போது நிர்வாகிகளுக்கு அவர் முக்கிய ஆலோசனை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் இதே போன்ற சந்திப்பு நடைபெறும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva