ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (07:38 IST)

தளபதி 68 படத்தில் இணைந்த லவ் டுடே புகழ் இவானா!

லியோ படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் லவ் டுடே புகழ் இவானாவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.