12 நாட்களில் ரூ.250 கோடி இழப்பு: ஸ்ட்ரைக் எதிரொலி...
சேவைக் கட்டண விவகாரத்தில் டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் பெரும் மோதல் எழுந்துள்ளது.
இதனால், மார்ச் 1 ஆம் தேதி முதல் தயாரிப்பாளர்கல் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது. அதன், பின்னர் தியேட்டர் நிறுவனர்களும் ஸ்ட்ரைக் அறிவித்தனர்.
இதனை அடுத்து, வரும் மார்ச் 16 ஆம் தேதியிலிருந்து ஷூட்டிங்குகளையே ரத்து செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், சினிமா சம்மந்தமான எந்த ஒரு நிகழ்வுகளும் நடைபெறவில்லை.
இதனால் பெரும் நஷ்டத்தை திரைப்படத்துறை சந்தித்துள்ளது என செய்திகள் வெளியாகிறது. ஆம், 12 நாட்களில் கிட்டத்தட்ட ரூ 250 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.