1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (11:39 IST)

இரண்டே நாட்களில் 20 லட்சம் பேர் பார்த்த ‘மெர்குரி’ டீஸர்

பிரபுதேவா நடித்துள்ள ‘மெர்குரி’ படத்தின் டீஸரை, இரண்டே நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். 
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெர்குரி’. கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சைலண்ட் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. அதாவது, வசனங்களே இல்லாமல் இசையின் மூலம் மட்டுமே காட்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், ஷனத் ரெட்டி, தீபக்  பரமேஷ், ‘மேயாத மான்’ இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
 
கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் டீஸர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இரண்டே நாட்களில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இதைப் பார்த்து ரசித்துள்ளனர். ஏப்ரல் 13ஆம் தேதி இந்தப் படம்  ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.