புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (12:45 IST)

"நான் அவனுடன் நட்பாக தான் பழகுகிறேன்" அடித்துக்கொண்ட லொஸ்லியா - சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் கவினுடனான நட்பை பற்றி சாக்ஷி ஹவுஸ்சமேட்ஸ் அனைவர் முன்னிலையில் தெரிவிக்க சாக்ஷி கடுப்பாகி லொஸ்லியாவுடன் சண்டையிடுகிறார். 


 
எனக்கும் கவினுக்கும் உள்ள பிரண்ட்ஷிப் எனக்கும் அவனுக்கும் தெரியும், நான் அதை ஒவ்வொருத்தரையும் கூப்பிட்டு தனித்தனியாக சொல்லவேண்டிய அவசியமில்லை. நான் அவனை நல்ல பிரண்ட் ஆகத்தான் பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே சாக்ஷி குறுக்கிட்டு ...இங்க நீ இதெல்லாம் விளக்கத்தேவையில்லை என்று கூறுகிறார்.
 
பின்னர் லொஸ்லியா, எனக்கு உங்களிடம் தனியா வந்து சொல்லவேண்டும் என இஷ்டமில்லை அதனால் தான் அனைவரும் முன்னிலையில் நின்று சொல்கிறேன் என வேகமாக சொல்லிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்கிறார்.