திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 15 மே 2019 (16:57 IST)

செல்ஃபி எடுக்க ஓடிவந்த ரசிகையிடம் மொக்கை வாங்கிய பாகுபலி நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகர், நடிகைகள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு ஆட்டோகிராஃப் கேட்ட காலம் மாறி தற்போது தங்களுக்கு பிடித்த பிரபலங்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள முந்தியடுத்து கொள்கின்றனர்.


 
இதனால் நடிகர்கள் சர்ச்சையில் சிக்கி ரசிகர்களால் பெருதும் விமர்சிக்கபட்டுள்ளனர். அந்தவகையில் சமீபத்தில் செல்ஃபி எடுக்க ஓடிவந்த ரசிகர்களிடம் பாகுபலி நடிகை நேரா ஃபதேஹி பயங்கரமாக பல்பு வாங்கியுள்ளார். இவர் பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற "மனோகரி" ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தற்போது இவர் பாலிவுட் படங்களில் நடித்துவருகிறார். 
 
இந்நிலையில் சமீபத்தில் இவர், தனது நண்பருடன் மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது நேராவை நோக்கி செல்ஃபி எடுக்க ஓடி வந்த இளம் பெண் ஒருவர் நேராவை தள்ளிச்சென்று அவரின் நண்பருடன் செல்பி எடுத்தார். இதனால் நேராவிற்கு கொஞ்சம் நோஸ் கட் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்னொரு நபர் நேரவிடம் செல்ஃபி எடுத்து அவரை கூல் படுத்தினார். காமெடியான இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.