திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (08:17 IST)

பாக்யராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த குறும்படம்… என்ன ஆனது?

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இயக்க இருந்த குறும்படம் கைவிடப்பட்டதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் வெற்றி விழா படங்களாக தொடர்ந்து கொடுத்து திரைக்கதை மன்னன் என பெயர் பெற்றவர் பாக்யராஜ். இந்தி வரை தனது வெற்றி முத்திரையை பதித்தவர். ஆனால் 1990 களுக்கு பிறகு அவர் படங்களின் வெற்றி குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் அவர் படங்கள் இயக்குவதையும் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டார்.

கடைசியாக அவர் இயக்கிய பாரிஜாதம் திரைப்படம் கூட கவனிப்பைப் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு குறும்படம் இயக்க ஆசைப்பட்டதாகவும், ஆனால் அது கைகூடாமல் போய்விட்டதாகவும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த படத்தை மீண்டும் எடுப்பதற்கான வேலைகளை செய்துவருவதாகவும் கூறியுள்ளார்.