வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 மே 2021 (17:05 IST)

50 ஆண்டுகள் ஒரே தொகுதி… நின்று அடிக்கும் உம்மன்சாண்டி!

கேரள காங்கிரஸ் தலைவர் உம்மன்சாண்டி 1970 முதல் ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெற்று வருகிறார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி சிபிஐஎம் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளது. கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. அதை முறியடித்து இரண்டாவது முறையாக முதல்வராக உள்ளார் பினராயி விஜயன்.

இதனால் காங்கிரஸ் இரண்டாவது முறையாக தொடர்ந்து தோல்வியை தழுவி உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் கேரளமாநில தலைவர் உம்மன்சாண்டி 10 ஆவது முறையாக ஒரே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் களமிறங்கினார். அப்போதில் இருந்து இப்போது வரை 10 முறை அதே தொகுதியிலேயே போட்டியிட்டு எல்லா தடவையும் வெற்றி பெற்றுள்ளார். இந்திய தேர்தல்களிலேயே வேறு எவரும் செய்யாத சாதனை இதுவாகும்.