வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (13:01 IST)

ரூ.1.70 கோடியில் புதிய சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்....வைரல் புகைப்படம்

lokesh kanakaraj
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக  உள்ள லோகேஷ் கனகராஜ் புதிய பி.எம்.டபள்யூ கார் வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர்  மாநகரம், கைதி, மாஸ்டர்  ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

சமீபத்தில்  வெளியான இப்படம் வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து, தற்போது விஜய் நடிப்பில், லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் முதல் சிங்கில், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த   நிலையில்,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டு படங்கள் நடிக்க இருப்பதாக சமீபத்தில் ரசிகர்களிடம் உரையாடிய சூர்யா தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்திருந்த நிலையில்,; ரோலக்ஸ் கேரக்டரை வைத்து லோகேஷ் ஒரு கதை தயார் செய்திருப்பதாகவும் அந்த கதையை லோகேஷ் கனகராஜ் சூர்யாவிடம் கூறிய போது அதில் நடித்த சம்மதம் தெரிவித்ததாகவும்; சூர்யா சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

அதேபோல் ;லோகேஷ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி என்ற திரைப்படத்திலும் விரைவில் தான் நடிக்க இருப்பதாகவும்; அவர் கூறியுள்ளார்.

எனவே லோகேஷ் கனகராஜின் அடுத்த பட பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக  உள்ள லோகேஷ் கனகராஜ் புதிய பி.எம்.டபள்யூ கார் வாங்கியுள்ளார்.

பிஎம்டபள்யூ 7 சீரிஸ் காரான இதன் விலை ரூ.1.70 கோடி ( ஷோரூம் விலை) எனத் தகவல் வெளியாகிறது.

இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.