1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:37 IST)

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… லியோ ஆடியோ வெளியீடு சென்னையிலா?

விஜய் நடிப்பில் லியோ லோகேஷ் இயக்கி வரும் லியோ திரைப்படம் இந்த ஆண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்போது லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா மலேசியாவில் நடக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் இப்போது ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. மலேசியாவில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரங்கில் செப்டம்பர் 23 ஆம் தேதி ஆடியோ வெளியீட்டை நடத்தலாம் என படக்குழு திட்டமிட, ஆனால் அந்த தேதியில் அரங்கு வேறு நிகழ்ச்சிக்காக புக் செய்யப்பட்டுவிட்டதாம்.

அதனால் லியோ ஆடியோ வெளியீட்டை சென்னையிலேயே நடத்தலாம் என படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரலாம் என சொல்லப்படுகிறது.