திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (16:45 IST)

''வாரிசு'' பட 2 வது சிங்கில் ''தீ பாடல்'' ரிலிஸ்...சமூகவலைதளத்தில் வைரல்

varisu thee
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் 2 வது சிங்கில்  தற்போது ரிலீஸாகிவுள்ளது.
 

இயக்குனர் வம்சி இயக்கத்தில்,   நடிகர் விஜய்- ராஷ்மிகா மந்தனா  நடிப்பில் உருவாகியுள்ள படம்  வாரிசு.

இப்படம் வரும் பொங்கலுக்கு அஜித்தின்  துணிவுடன் மோதவுள்ளது.  இந்த  நிலையில், இப்படத்தின் முதல் சிங்கில் ரஞ்சிதமே பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆன நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற தீ என்ற பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில், இப்பாடலை பாடிய சிம்புவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் நன்றி கூறியதுடன், இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டது.

இந்த நிலையில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா  நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் வாரிசு பட 2 வது சிங்கிலை வெளியிட்டுள்ளது.

இப்படத்தில்,, சிம்பு பாடியதுடன் மட்டுமின்றி தீ பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் 3 வது ஆண்டி அடியெடுத்து வைக்கும் விஜயை பாராட்டும் வகையிலும் ரசிகர்களுக்கு விருதளிக்கும் வகையில், உடஞ்ச மேகமே மா மழய குடுக்குமே .. கிழிஞ்ச வெதயிலே தான் காடு பொறக்குமே எனத் தொடங்கும் விவேக்கின் வரிகளில் இப்பாடல் அமைந்துள்ளது.