வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (14:36 IST)

புத்தகமாக வெளியாகும் கைதி, மாஸ்டர், விக்ரம்..! – சென்னை புத்தக விழா ஸ்பெஷல்!

Lokesh Books
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்களின் திரைக்கதை புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகியுள்ளது.

தமிழில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட ப்ளாக்பஸ்டர் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் அடுத்து தளபதி 67, கைதி 2, விக்ரம் 2 என பல படங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. தமிழ் ரசிகர்கள் இடையே லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் மிகவும் பிரபலமானதாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் திரைக்கதை புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பேசாமொழி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளது. இந்த படங்களின் திரைக்கதை புத்தகங்கள் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K