1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:32 IST)

ரஜினி& லோகேஷ் இணையும் ‘தலைவர் 171’ படம் இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி கவனம் பெற்றது. இந்த போஸ்டரில் ரஜினியின் கையில் கைவிலங்குகள் போல கைக்கடிகாரங்கள் பிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த படமும் லோகேஷின் முந்தைய படமான லியோ போல ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலாக உருவாக்கப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு வெளியான தி பர்ஜ் என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.