ரஜினி லோகேஷ் பட ப்ரமோஷன் வீடியோவுக்கான செட் தயார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை உறுதி படுத்துவது போல சமீபத்தில் வெளியான போஸ்டரில் ரஜினி மிகவும் இளமையான தோற்றத்தில் காணப்பட்டார்.
லோகேஷ் எப்போதும் தன்னுடைய படத்தின் டைட்டிலை ஒரு ப்ரோமோ வீடியோவோடு வெளியிடுவார். தலைவர் 171 படத்தின் டைட்டில் அப்டேட்டும் ஒரு ப்ரோமோவோடு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக செட் அமைக்கும் பணி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தற்போது அமைக்கப்பட்டு வருகிறதாம். ப்ரமோ ஷூட் விரைவில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.