ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (08:12 IST)

‘மஞ்சும்மள் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கத்தில் நடிக்கப் போகும் தமிழ் ஹீரோ!

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கேரளா தாண்டியும் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கேரளாவின் மஞ்சும்மள் பகுதியில் வசிக்கும் ஒரு நண்பர் குழு கொடைக்கானலில் உள்ள டெவில்ஸ் கிச்சன் எனப்படும் குணா குகைக்குள் சென்று மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளது மஞ்சும்மள் பாய்ஸ்

இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சக்கை போடு போட்டு 200  கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. மலையாளத்தில் உருவான ஒரு படம் 200 கோடி ரூபாய் வசூலிப்பது இதுவே முதல் முறை. தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. இதனால் இந்த பட இயக்குனர் சிதம்பரத்தின் இயக்கத்தில் நடிக்க ஹீரோக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சிதம்பரம் அடுத்து ஒரு மலையாள படத்தை இயக்கிவிட்டு பின்னர்தான் இந்த படத்தை இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.