1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:18 IST)

ஆறடி படக்குழுவினருடன் ஒரு நேரடி சந்திப்பு....

விரைவில் வெளியாகவுள்ள ‘ஆறடி’ படத்தின் குழுவினருடன் வெப்துனியா இன்று ஒரு நேரடி சந்திப்பை நடத்துகிறது. 


 

புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண் சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்தது பற்றிய சம்பவத்தை ஆறடி என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.
 
ஒரு பெண் வெட்டியான் வேலை செய்தால் என்னென்ன சம்பவங்கள் நடைபெறும். அப்பெண்ணிற்கும், அவரை பேட்டியெடுக்க வரும் ஒரு பத்திரிக்கையாளருக்கு இடையே ஏற்படுகிற காதல் ஆகியவற்றை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜயராஜ், தீபிகா ரங்கராஜ், ஜீவிதா, டாம்பிராங், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அபிஜோஜோ இசை அமைத்துள்ளார். சந்தோஷ்குமார் என்ற இளைஞர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் பல குறும்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில்தான் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில், இப்படக்குழுவினருடன் வெப்துனியா இன்று மாலை 4.30 மணியளவில் ஒரு நேர் காணலை நடத்துகிறது. அவர்களின் உரையாடல் நேரடியாக பேஸ்புக்கிலும் ஒளிபரப்பப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதோடு, வாசகர்கள் அதைக் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்.