செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 16 மே 2022 (18:58 IST)

விக்ரம் படத்தில் நானும் இருக்கின்றேன்: நடிகை லிசி பதிவு

vikram to vikram
விக்ரம் படத்தில் நானும் இருக்கின்றேன்: நடிகை லிசி பதிவு
கடந்த 1986ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்து இருந்த நடிகை லிசி வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் 
 
பழைய விக்ரம் படத்திற்கும் இந்த விக்ரம் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆனாலும் இந்த படத்தில் இடம்பெற முடியவில்லை என்ற வருத்தம் தனக்கு இருந்ததாகவும் நடிகை லிசி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
இருப்பினும் இந்த விக்ரம் திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தனது ஸ்டூடியோவில் நடந்தது. அதனால் இந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்ற திருப்தி தனக்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்
 
 நடிகை லிசி, பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் முன்னாள் மனைவி என்பதும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது