1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:22 IST)

லிங்குசாமியின் ‘தி வாரியர்’: சிம்பு பாடிய பாடல் ரிலீஸ்

warrior
பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் தி வாரியர்
 
தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு பாடிய பாடல் இன்று ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் அந்த பாடல் வெளியாகி உள்ளது
 
சிம்பு மற்றும் ஹரிஜா பாடியுள்ள இந்த பாடலை தேவிஸ்ரீபிரசாத் கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
ராம் பொத்தினேனி ஜோடியாக கீர்த்தி ஷெட்டிநடித்துள்ள இந்த படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடித்துள்ளார் என்பதும் முக்கிய வேடத்தில் பாரதிராஜா, நதியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது