ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:16 IST)

''லெஜண்ட் சரவணா'' படமுதல் சிங்கில் புதிய சாதனை

legend saravana
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள லெஜண்ட் படத்தின் முதல் சிங்கில் 10 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
 

 சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

வேல்ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தில் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘மொசலோ மொசலு’ என்ற பாடல் இணையத்தில் வெளியானது. இந்த பாடலை முன்னணி இயக்குனர்களான மணிரத்னம் மற்றும் எஸ் எஸ் ராஜமௌலி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

இப்பாடல் சுமார் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இது  ஹாரிஸ்      ஜெயராஜ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது ரீ எண்ட்ரிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர். அதேபோல் முதல் படத்தில் முதல் பாடல் ஹிட் கொடுத்து ஹீரோவாக  நடித்துள்ள லெஜண்ட் சரவணாவின் ரசிகர்களும் இப்படத்தை எதிர்பார்த்துள்ளனர்.  

இப்பாடம் 1 கோடி பார்வையாளர்களைப் பெற்றதற்கு ஹரிஸ் ஜெயராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.