வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (23:00 IST)

பள்ளிப் பாடப் புத்தகத்தில் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை !

கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித்  ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  உடற்பயிற்சி செய்யும்போது, மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது உயிரிழப்பு சினிமாத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இ ந்நிலையில்,  இவர் சினிமாவைத் தாண்டி, சுமார் 119  கோசாலைகள், 16 முதியோர் இல்லங்கள், 4,800 மாணவ- மாணவிகளுக்கு இலவசக் கல்வி உதவியும் செய்து வந்தார். சமீபத்தில் இவர்  நடித்த கடைசிப் படம் ஜேம்ஸ் திரையரங்கில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்றது.

இ ந் நிலையில் புனித் ராஜ்குமாரின் சினிமாவாழ்க்கை மற்றும் சமூக சேவையை பெருமைப்படுத்தும் வகையில், அவரது  வாழ்க்கை வரலாற்றைப் பாடமாக வைக்க கர் நாடக அரசு ஆலோசிப்பதாக கர் நாடக மந்திரி பி.சி. நாகேஷ் அறிவித்துள்ளார்.

வரும் கல்வியாண்டில் 4 அல்லது 5 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அவரது வாழ்க் கை வரலாறு இடம்பெறும் என கூறப்படுகிறது.