செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (09:50 IST)

கொரோனாவுக்கு நிதி கொடுத்தால் என்னோடு நடிக்கலாம்! அறிவிப்பை வெளியிட்ட ஹாலிவுட் நடிகர்கள்!

கொரோனாவால் அமெரிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு நிதி கொடுத்தால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கலாம் என லியானார்டோ டி காப்ரியோ அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ள அமெரிக்காவில் அதன் பரவல் உச்சக்கட்டத்தில் உள்ளது. அங்கு இதுவரை கிட்டதட்ட 7 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு 35,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டி வருகிறது அமெரிக்கா.

இந்நிலையில் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வித்தியாசமான முறையில் நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கும் ‘கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்’ என்ற படத்தில் நானும் ராபர்ட் டி நீரோவும் நடித்து வருகிறோம். கொரோனாவுக்காக நிவாரணம் வழங்குபவர்கள் எங்கள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம், நாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் எங்களோடு இருக்கலாம். படத்தின் சிறப்பு காட்சியில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.