கிருஷ்ணர் அருள்புரிந்தால் தேர்தலில் போட்டியிடுவேன்… கங்கனா பதில்!
பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. முன்னணி ஒளிப்பதிவாளர் கங்கனாவின் படத்தில் பணியாற்ற மாட்டேன் என வெளிப்படையாகவே அறிவித்தார்.
பாஜகவை சேர்ந்தவர்களோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் கங்கனா வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் பரவின. இதுபற்றி குஜராத் கோவிலுக்கு வந்த அவரிடம் கேட்டபோது “கிருஷ்ணர் அருள்புரிந்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன்” எனக் கூறியுள்ளார்.
கங்கனா கதாநாயகியாக நடித்த தேஜஸ் திரைப்படம் ராணுவப் பின்னணியில் உருவாகி கடந்த 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.