வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2023 (10:19 IST)

அரசியலுக்கு வறதுக்கு முன்னாடி இதை பண்ணுங்க விஜய்! – இயக்குனர் வெற்றிமாறன் கருத்து!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.



தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். நீண்ட காலமாக அரசியலில் நுழைவதற்காக காய் நகர்த்தி வரும் நடிகர் விஜய் தற்போது நேரடியாக பல அரசியல் செயல்பாடுகளையும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன் “விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில்தான் செயல்பட்டு வருகிறார். அவர் அரசியலுக்கு வரட்டும். ஆனால் அதற்கு முன்னதாக அதற்கான கள செயல்பாடுகளில் அவர் ஈடுபட வேண்டும். அரசியல் என்பது சவாலானது. அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களே அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

என்னதான் விஜய் தனது இயக்கம் மூலமாக அரசியல் கள செயல்பாடுகளை செய்து வந்தாலும் அவர் நேரடியாக களத்தில் இறங்க வேண்டும் என்பதைதான் வெற்றிமாறன் பூடகமாக சொல்கிறார் என்று கருத்து நிலவுகிறது.

Edit by Prasanth.K