ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:46 IST)

தளபதி 68 படத்துக்கு டைட்டில் ரெடி… அறிவிப்பு எப்ப வரும்?

லியோ படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்துக்காக நான்கு டைட்டில்களை விஜய்யிடம் வெங்கட் பிரபு கொடுக்க, அதில் ஒரு டைட்டிலை விஜய் செலக்ட் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து படத்தின் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.