வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (11:44 IST)

மனிஷா யாதவ் என்னால் தான் சினிமாவை விட்டு போனாங்களா?... பதிலளித்த இயக்குனர் சீனு ராமசாமி!

இயக்குனர் சீனுராமசாமி பற்றி பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறிய குற்றச்சாட்டு ஒன்று சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் பேசிய பிஸ்மி ”சீனு ராமசாமி இயக்கத்தில் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்க ஒப்பந்தமான மனிஷா ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற போது அவருக்கு பல விதங்களில் சீனு ராமசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததால் ஒரு வாரம் மட்டுமே அந்த படத்தில் நடித்திருந்த நிலையில் மனிஷா அந்த படத்தில் இருந்து வெளியேறினார். சென்னை வந்தபிறகு எனக்கு போன் போட்டு அவர் என்னவெல்லாம் தொந்தரவு கொடுத்தார் என்று பேசினார். அதற்கான எல்லா ஆதாரமும் என்னிடம் உள்ளது. சீனு ராமசாமியால்தான் அவர் சினிமாவை விட்டே வெளியேறினார்” என ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். 

இந்நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார்.. ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க.. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க.. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க... இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவோடு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு குப்பைக் கதை படத்தின் ஆடியோ ரிலீஸில் பேசும் மனிஷா யாதவ் இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி தெரிவித்து பேசியுள்ளார். இதன் மூலம் தான் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று சீனுராமசாமி பதிவு செய்துள்ளார். இதில் சம்மந்தப்பட்ட நடிகை மனிஷா யாதவ் இதுபற்றி பேசினால்தான் உண்மை தெரியவரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்