1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (12:16 IST)

வெட்கப்பட்டு தயங்கிய நடிகரை இழுத்து முத்தம் கொடுத்த ஆர்யாவின் தங்கை!

கடந்த 2010ம் ஆண்டு ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவின் தங்கையாக நடித்தவர் லீமா. இந்த படத்தில் அவருக்கு சிறிய ரோல் தான் என்றாலும் அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நிற்கும்படியாக இருந்தது. 
 
இவர் தற்போது தமிழ் செல்வன் இயக்கத்தில் உருவாகி வரும் "உதய்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஹீரோவாக உதய் என்பவர் நடிக்கிறார். அவரே படத்தின் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளார். தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் படத்தின் முத்த காட்சி ஷூட்டிங் போது ஹீரோயினை கட்டிப்பித்து முத்தம் கொடுக்க ஹீரோ உதய் வெட்கப்பட்டு தயக்கம் காட்டியுள்ளார். ஆனால், அதை சுதாரித்துக்கொண்ட லீமா...இது வெறும் நடிப்பு தானே அப்புறம் என்ன தயக்கம் என தைரியம் கூறி அவரே இழுத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனை கண்ட படக்குழுவினர் இந்த பொண்ணுக்கு என்னா ஒரு  தைரியம் என வாய்பிளந்து வருகின்றனர்.