செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (18:45 IST)

தாயை இடிப்பில் தூக்கிகொஞ்சும் முன்னணி நடிகை !

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில்  வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் கோமாளி. இப்படத்தில் நடிகர் ரஜினியை குறித்த காட்சிகளுக்கு நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது திறமையான நடிப்புக்காக பலராலும் பாராட்டப்பட்டார்.

தற்போது அவர் முன்னணி நடிகையாகப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா தனது உடற்பயிற்சி குறித்த வீடியோக்களைப் பதிவிட்டு ரசிக்கர்கள் உற்சாகத்தில் ஆழ்த்துவார்.

இந்நிலையில் இன்று இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில். தனது தாயை இருப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, கொஞ்சிய வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இது சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகிறது.