ரூ. 60க்காக ஒருவரை கொலை செய்து மது அருந்திய நபர்கள்...அதிர்ச்சி சம்பவம்

Sinoj| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2021 (18:29 IST)

டெல்லியில் மது குடிப்பதற்கு பணம் வேண்டுமென்பதற்காக ரிக்‌ஷாகாரரை கொலை
செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.தலைநகர் டெல்லியில் தற்போது விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வசுந்த்ரா என்க்ளேவில் என்ற தனியார் பள்ளிக்கு அருகில் ஒரு ரிக்‌ஷாகாரரின் சடலம் இருந்தது கண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார்
இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனையில் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

பின்னர் கொலை செய்யப்பட்டவர் ரிக்‌ஷா தொழிலாளி ஜிபன் மஜூம்ம்தான் என்பதும், இவரிடமிருந்த பணப்பையில் இருந்த ரூ.60 ஐ திருட அங்கிருந்த சோட்டன் சிங் மற்றும் திலீப் ஆகிய இரு இளைஞர்கள் அவரைக் கொன்று அதை மதுகுடிப்பதற்குக் கொண்டு சென்றது தெரியவந்தது.

இவ்விருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
இதில் மேலும் படிக்கவும் :