வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:59 IST)

கல்விசார் நிறுவனத்தில் முதலீடு செய்த முன்னணி நடிகை !

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோன் சமீபத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தீபிகாபடுகோன் முக்கிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு Epigamia என்ற பிரபல நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த நிலையில் தற்போது கல்விசார் தொடர்புடைய Frontrow என்ற நிறுவனத்திலும் அவர் முதலீடு செய்துள்ளார்.

சினிமா வட்டாரத்தில் உள்ள முன்னணி நடிகை தீபிகா படுகோன் கல்வி சார் தொடர்புடைய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதற்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.