வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (21:27 IST)

ஆற்றில் தவறி விழுந்த முன்னணி நடிகை...

நடிகை ஆற்றில் தவறி விழுந்தார். அவருக்கு மேக்க கலைஞர் உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஜீவா. இவரது நடிப்பில்  வெளியாக படம் சிங்கம் புலி. இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஹரினி ரோஸ்.

நடிகை ஹரிணி ரோஸ்  முதல் கனவே, மல்லுக்கட்டு, காந்தர்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இட்டிமானி, பிக்பிரதர் அவர் தெலுங்கு கன்னட படங்களிலும் உள்ளிட்ட  ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கேரளாவில் ஆற்றங்கரையோரம் ஹனிரோஸ் போட்டோ சூட் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, பட்டுச்சேலையுடன் தலையில் பூ வைத்துக்கொண்டு, ஆற்றில் ஒரு கல்லைப்போட்டுக்கொண்டு கேமராவுக்குப் போஸ் கொடுத்தார்.

அப்போது ஒரு கல்லுக்கு மேல் இன்னொரு கல்லை அவர் தூக்கி வைத்தபோது, கால் தடுமாறிக் கீழே விழுந்தார். அப்போது, கேமராமேன் உள்ளிட்ட படக்குழிவினர் அவரைத்தூக்கிவிட்டனர்.  நல்லவேளையாக அவருக்குக்கு காயம் ஏற்படவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹைனிரோஸில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.