1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:07 IST)

மகாசமுத்திரத்தில் இணைந்துள்ள நடிகை அதிதி ராவ்….

தெலுங்கு சினிமா பல்வேறு கதை அம்சங்களுடன் ஜனரஞ்சகமான முறையில் தயாராகி வருகிறது. ரசிகர்கள் பிரமாண்ட படங்கள் உள்ள படங்களுக்கு அமோகமாக வரவேற்புத் தருகின்றனர்.

இந்நிலையில், தெலுக்கு சினிமாவில் ஆர் எக்ஸ் 100 என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குநர் அஜய் பூபதி தற்போது இயக்கவுள்ள படம் மகா சமுத்திரம். இப்படத்தை ஏ.கே.எண்டர்டெயிமெண்ட் தயாரிக்கிறது.

இப்படத்தில் எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என்ற கோணத்தில் தயாராகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக காற்று வெளியிடை படத்தில் நடித்த அதிதிராவ் நடிக்கவுள்ளார்.