1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (08:48 IST)

வெற்றிமாறனோடு கூட்டணி சேரும் லாரன்ஸ்! விரைவில் அறிவிப்பு!

இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனத்தில் லாரன்ஸ் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

காஞ்சனா பட வரிசைகளின் மூலம் ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை தனது படங்களுக்கு உருவாக்கி வைத்துள்ளார். இதனால் அவரை வைத்து படம் தயாரிக்க பட நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இப்போது அவர் ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸுக்காக கஞ்சனா 3 படத்தையும் இயக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கவில்லையாம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.