திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (07:42 IST)

முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி

இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண நிகழ்ச்சியின் சடங்குகள், விழாக்கள் கடந்த சில நாட்களாக மும்பையில் ஆடம்பரமாக நடந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், ஹிலாரி கிளிண்டன் உள்பட உலக தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் அவர்களுடன் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ரஜினி இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

நேற்று ரஜினிகாந்த் தனது 69வது பிறந்த நாளை கொண்டாடியபோது ஷாருக்கான், அமிதாப், உள்பட பல பிரபலங்கள் அவருக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின்போது நேரிலும் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.