1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (09:35 IST)

இந்த தடவ வன்முறையெல்லாம் கிடையாது… பாசமலர் பாணியில் செண்ட்டிமெண்ட் கதையை கையில் எடுத்த் இயக்குனர் பாலா!

சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் சூர்யா விலகிவிடவே, இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடந்த நிலையில் இப்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் மகாபலிபுரத்தில் தொடங்கி நடந்தது. அதன் பிறகு இப்போது அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்குகள் நடந்து வருகின்றன.

வழக்கமாக ரத்தமும் சதையுமுமான ஆக்‌ஷன் கதைகளை எடுக்கும் பாலா, இந்த முறை அண்ணன் தங்கை செண்ட்டிமெண்ட் கதையை கையில் எடுத்துள்ளாராம். பாசமலர் போல உருக்கமான செண்ட்டிமெண்ட் கதையாக வணங்கான் இருக்கும் என சொல்லப்படுகிறது.