வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (14:47 IST)

நான் என்னுடைய தீர்ப்பில் உறுதியாக உள்ளேன்: செந்தில் பாலாஜி வழக்கின் நீதிபதி நிஷா பானு..!

நான் என்னுடைய தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பளித்த நீதிபதி நிஷா பானு தெரிவித்துள்ளார்.  
 
நான் என்னுடைய தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு சென்று விட்டதால் மேற்கொண்டு எந்த உத்தரவும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானு தெரிவித்துள்ளார்.
 
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற தனது தீர்ப்பில் உறுதியாக உள்ளதாக நீதிபதி நிஷா பானு தெரிவித்துள்ள நிலையில் இரண்டாவது நீதிபதியின் கருத்து இன்னும் சில நிமிடங்களில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran