வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (10:13 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு சலுகைகளா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

Minister Ragupathi
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து சிறைத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். 
 
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் எந்த விதமான சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்றும் முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். 
 
சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தினமும் ரூ.30000 மதிப்புள்ள உணவுகள் வெளியில் இருந்து வந்து கொண்டிருப்பதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த பதிவுக்கு பதிலாக அமைச்சரின் இந்த பேட்டி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran