1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:50 IST)

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் இந்தி ரீமேக்… நடிக்கும் முன்னணி நடிகர்!

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் எனும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார்.

மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்.

திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன. அந்த வகையில் இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே எஸ் ரவிக்குமார் தயாரித்து நடித்துள்ளார். இந்நிலையில் இப்போது இதன் இந்தி ரீமேக்கில் அனில் கபூர் குஞ்சப்பன் வேடத்தில் நடிக்க உள்ளாராம்.