செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:26 IST)

2021 ஆம் ஆண்டு வெளியான ட்ரைலர்… பெல்பாட்டம் சாதனை!

பெல் பாட்டம் படம் 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களின் டிரைலர்களில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் தயாராகி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவன்ம் பெரும் தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியானது. இந்த டிரைலர் 24 மணி நேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட டிரைலராக சாதனைப் படைத்துள்ளது.