ரஜினியின் லால் சலாம் படத்துக்கு கதை எழுதியது இவரா?... சுவாரஸ்ய தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்திற்காக திருவண்ணாமலையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் திருவண்ணாமலையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக விஷ்ணு ரங்கசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான வேல்ராஜின் உறவினர் என்று சொல்லப்படுகிறது. மேலும் லால் சலாம் படத்துக்கு கதை, வசனம் எழுதியதும் இவர்தான் என்று சொல்லப்படுகிறது.