வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (10:00 IST)

ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி ஹீரோவாக நடிக்கும் வெப் சீரிஸ்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆன  திரைப்படம் டிரைவர் ஜமுனா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய படங்கள். இதையடுத்து அவர் நடிப்பில்  அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில், இப்போது அவரது குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர் திரையுலகுக்கு அறிமுகமாகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் இந்த வெப் சீரிஸுக்கு ‘மை டியர் டயானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  பி.கே.விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் ஆகிய இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். சமீபத்தில் தொடங்கிய இந்த சீரிஸின் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷும் கலந்துகொண்டார்.