1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (15:46 IST)

லால் சலாம் படத்தில் 7 நாட்கள் மட்டும்தானா?- பெரிய எதிர்பார்ப்பு புஸ்ஸுனு ஆயிடுமோ?

ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்க உள்ளார்.

ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் வெறும் 7 நாட்கள் மட்டுமே நடிக்க உள்ளதாகவும், அதற்காக அவருக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.