1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (14:36 IST)

எல்ஐசி பெயரை வைத்தால் விக்னேஷ் சிவன் மீது வழக்குத் தொடர்வேன்: இயக்குநர் குமரன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு எல்ஐசி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பெயரை வைத்தால் வழக்கு தொடர்வேன் என இயக்குனர் குமரன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 
இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய படத்திற்கு எல்ஐசி என்ற பெயர் வைக்க என்னை அணுகினார். ஆனால் நான் இயக்கும் படத்திற்கு அந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்பதால் நான் மறுத்துவிட்டேன்.
 
 நான் முறைப்படி அந்த தலைப்பை பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஆனால் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைத்திருப்பதாக அறிகிறேன். இது முழுக்க முழுக்க அதிகாரத் தன்மை கொண்டது. 
 
அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்தின் முன் நிற்கிறேன். எல்ஐசி என்ற தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்தக்கூடாது.  மீறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran