1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (12:46 IST)

10 ஓவர்கள் கொண்ட டி10 தொடர்: இந்தியாவில் அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்?

தற்போது டி20 கிரிக்கெட் தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்டமாக 10 ஓவர்கள் கொண்ட டி10 தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஒரு காலத்தில் ஐந்து நாட்கள் விளையாடும் டெஸ்ட் போட்டி பிரபலமாக இருந்த நிலையில் அதன் பின்னர் 60 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டி, 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டி என மாறியது. 
 
இந்த நிலையில் தற்போதைய விறுவிறுப்பான காலத்தில் டி20 தொடர் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் அதிலும் குறைவாக பார்த்து ஓவர்கள் கொண்ட டி10 தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்படலாம் என்றும் இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பத்து ஓவர்கள் என்றால் 2 மணி நேரத்தில் மேட்ச் முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran